பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் பேருந்து இயக்குவதற்கான அரசாணை வெளியிட்டப்படுள்ளது. அதில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேருந்துகள் நாளை முதல் மண்டல வாரியாக இயக்கப்படுகின்றது. எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டத்தில் எட்டாவது மண்டலமான சென்னை, ஏழாவது மண்டலமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மண்டலங்களில் பேருந்துகள் இயங்காது. மற்ற 6 மண்டலங்களில் பேருந்தை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதற்கான அரசாணையில் மாதாந்திர பயணச்சீட்டு வழங்குவதற்கான திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல ஒவ்வொரு பயணம் முடிந்ததும் பேருந்துகள் நிச்சயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பயணிகள் பேருந்தில் பின்புறமாக ஏறி முன்புறமாக தான் இறங்க வேண்டும், அதை நடத்துனர்கள் நிச்சயமாக பின்பற்ற வேண்டும். பேருந்தில் 60% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதால் தகுந்த இடைவெளியில் நின்று, வரிசையில் பேருந்தில் எற வேண்டும். பேருந்தில் ஏறி இறங்கும் வழியில் கிருமிநாசினி வைக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை இயக்கும் போது அதில் குளிர்சாதனம் பயன்படுத்தக் கூடாது. ஓட்டுநர் நடத்துனர் ஆகிய இருவரும் தினமும் வெப்ப பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். உடலில் அதிகமான வெப்பம் இருந்தால் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே போல ஓட்டுநர் நடத்துனர் ஆகிய இருவருக்கும் கையுறைகள் கொடுக்க வேண்டும். கிருமி நாசினிகள் கொடுக்க வேண்டும். நிச்சயமாக இருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்தில் பயணிக்க கூடிய பயணிகளும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மூன்று இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு இருக்கைகள் இருந்தால் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பல்வேறு வழிமுறைகளை கொண்டு இந்த அரசாணை வெளியாகியிருக்கிறது.