Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR அணி அற்புதமான தொடக்கம்….6 ஓவர் முடிவில் 64/0 ….!!

ராஜஸ்தான் அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்துள்ளது 

ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 ரன்களில்  குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  இதையடுத்து கெய்லும்,  அகர்வாலும் பொறுப்புடன் விளையாடினர். மயங் அகர்வால் 22 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவரை கடந்ததும் கிறிஸ் கெய்ல்  அதிரடியில் இறங்கினர்..இதையடுத்து சர்பராஸ் கான் களமிறங்கி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்ல் அரைசதம் 79  (47) ரன்கள் குவித்து பென்ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த பூரன் 12 ரன்னில் ஆட்டமிழக்க இறுதிவரை வரை நின்ற சர்பராஸ் கான் 46*(29), மந்தீப் சிங் 5* (2) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு  184  குவித்துள்ளது.

இதயடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பவுண்டரியுடன் கேப்டன் ரஹானே தொடங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஹானே 21 (14), பட்லர் 43 (22) ரன்களுடன் அற்புதமான ஆட்டத்துடன் விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |