விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐ.சி.எம்.ஆர் தலைமை அலுவலகம் மூடபடு இருக்கின்றது.
சம்பந்தப்பட்ட விஞ்ஞானி மும்பையிலிருந்து பயணம் செய்து டெல்லி வந்திருக்கிறார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த சோதனையில் அவருக்கு குறைவாக இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை தவிர ICMR அலுவலகத்திலேயே சில கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருந்தார். ஆகவே தற்போது அந்த அலுவலகம் மூடப்பட்டு அங்கே தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தூய்மை பணி முடிந்த பிறகு அங்கு அலுவலகம் தொடங்கும் என தெரிகிறது. இந்தியன் மருத்துவ கவுன்சில் தான் கொரோனாவுக்கு அரசுக்கு எதிரான நடக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்று பரிசோதனைகள், சிகிச்சைகள் போன்றவை குறித்த ஆலோசனையை மத்திய, மாநில அரசுக்கு வழங்கி வருகின்றது. அப்படியான சூழலில் விஞ்ஞானியே கொரோனவால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அங்குள்ள மற்ற விஞ்ஞானிகள் மிகவும் கவனத்துடன் செயல்படும் படி அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.