சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாதவரம் ஆவின் பால் பண்ணையின் மிஷின் ஆபரேட்டர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மே 26ம் தேதி தொற்று உறுதியாகி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
மேலும் வேளச்சேரியை சேர்ந்த 45 வயது ஆண், ராயப்பேட்டையை சேந்த 51 வயது நபர், பெரம்பூரை சேர்ந்த 45 வயது ஆண் என 4 பேர் ஓமந்தூரார் மருத்துவமனையில் பலியாகியுள்ளனர். இதேபோல சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 57 வயது பெண், மாதவரத்தை சேர்ந்த முதியவர், பெரம்பூரை சேர்ந்த 53 வயது பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோயம்பேடு மங்கம்மாள் நகரை சேர்ந்த 69 வயது முதியவர் மற்றும் திருவல்லிகேணியை சேர்ந்த 42 வயது நபர் என இருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர்.