வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் எஸ் பாரதி எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி காவல்துறையினரால் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஆர்.எஸ் பாரதிக்கு நீதிமன்ற காவலில் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும்மேலும் ஜூன் ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ஆர்.எஸ் பாரதிக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையில் ஆர்.எஸ் பாரதி இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அதோடு இன்றைய தினம் ஜூன் ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் நேரில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்ததனடிப்படையில் இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் முதலாவது கூடுதல் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ் பாரதி ஆஜராகினார்.
நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் நடந்த வாதத்தில் ஆர் எஸ் பாரதி, காவல்துறை, புகார்தாரர் கல்யாணசுந்தரத்தின் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தீர்ப்பை மாலை 3 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.