சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்…
சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கள் நாட்டின் ராணுவ சக்தியை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். எனவே, இதுபோன்ற அச்சுறுத்தல்களை உறுதிசெய்ய எங்களது பாதுகாப்புத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தலைமையில் எங்கள் பாதுகாப்பு துறை, ராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு போன்றவை அமெரிக்க மக்களை பாதுகாக்க கூடிய நிலையில் உள்ளது என நம்புகிறோம். மேலும் உலகம் முழுவதும் இந்தியா ,ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், பிரேசில், ஐரோப்பா போன்ற பல நாடுகளுடன் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட முடியும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியா சீனாவிற்கு இடையேயான எல்லை பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக இதுபோன்று செயல்பட்டு வருகிறது. அவர்கள் நிச்சயம் தந்திரமான சூழ்நிலையை பயன்படுத்துவார்கள் நீண்ட காலமாக இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க எங்களிடம்ஒரு நிர்வாகம் தயாராக உள்ளது. சீனாவின் இதுபோன்ற முயற்சிகளில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்கும் கடமையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.