ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் முன்னாள் விமானப்படை தளபதி முகமது பாகர் கலிபா கடந்த வியாழக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் உரையாடியதில் கடந்த ஜனவரி மாதம் ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானியை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு தியாகியான சுலைமானியின் ரத்தத்திற்கு நிச்சயம் பழிவாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது, தீங்கினை விளைவிக்கும் என்றும் அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்தை இப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கடும் கோபத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.