Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…காரியத்தடை உண்டாகும்…மரியாதை கூடும்….!

கன்னி ராசி அன்பர்களே …!     இன்று பல வழிகளிலும் பணம் வந்து சேரும்  தனலாபம் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கௌரவம் மரியாதை கூடும். பெண்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் கூடி மகிழ்வார்கள். தியானம் போன்றவற்றை செய்யுங்கள் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. காரியத்தடை தாமதம் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும்.

எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றால் சிறப்பு. வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். தொழில் வியாபாரம் மந்தமாக தான் இருக்கும். ஆனால் பழைய பாக்கிகள் வசூலாவதில் மகிழ்ச்சி இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப்பளுவும் கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகும்.

காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதியதாக காதல் வயப்பட்ட கூடிய சூழலும் உண்டாகும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |