துலாம் ராசி அன்பர்களே …! இன்று நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும் ஆனால் வருவதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதியவர்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இடமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் வேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பணி மாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது மூலம் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். காதலர்கள் மட்டும் இன்று பொறுமை காக்க வேண்டும்.
நிதானமாக அனைத்து விஷயங்களையும் கையாளவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.