Categories
அரசியல்

இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் இறுதிசடங்கு நிகழ்வில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது  இறுதி சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது 50 பேர் பங்கேற்கலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஊரடங்கிலும் 20 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்தது இருந்த தளர்வு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் போதிய தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசங்கள் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |