- 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா
- 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்
- 5000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்த இவர் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
- 1993 ஆம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஆசிய கண்டத்தில் முதல் சிம்பொனி இசை அமைப்பாளர் என்ற சிறப்பை இளையராஜா பெற்றார்.
- சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார்.
- இசைத்துறையில் சாதனை புரிந்ததற்காக 2010ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
- இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு அளித்து வருவதை பாராட்டி 2012 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கியது.
Categories