அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதுங்கு குழிக்குள் பதுங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பதுங்குகுழியில் பதுங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்… அமெரிக்கா அதிபருக்கே இந்த நிலையா ? என வியக்கும் உலக மக்கள்.
வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளி இரவு நடந்தது என்ன?
அமெரிக்கா அதிபரின் அலுவலகமும், வீடுமான வெள்ளை மாளிகையில் அதிபரின் பாதுகாப்புக்கு இருந்த ரகசிய போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளார். வெள்ளை மாளிகை அருகே உள்ள ஆலயங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள். சுமார் ஒரு மணிநேரம் பதுங்கு குழியில் பதுங்கிய டிரம்ப், மனைவி மெலானியா மற்றும் மகன் என மூன்று பேரையும் ரகசிய போலீஸ் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் வைத்திருந்தார்கள்.
வெள்ளை தோல் மக்களுக்கு நிகரான சம உரிமை கருப்புத்தோல் மக்களுக்கும் வேண்டும் என அமைதி வழியில் போராடிய மார்ட்டின் லூதர்கிங் கொலைக்கு (1968) ஆம் ஆண்டு பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய கொந்தளிப்பு இது பெரிய கொந்தளிப்பு இது. வன்முறையால் அமெரிக்காவில் 40 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு காரணம் என்ன ?
46 வயதான ஜார்ஜ் பிளாயிட் (கருப்பு நிறத்தவர்) போலீஸ் (வெள்ளை நிறத்தவர்) படியில் மரணம். ஜார்ஜ் பிளாயிட் ஒரு கடைக்குப்போய் 20 டாலர் கொடுத்து சிகரெட் வாங்கி இருக்கிறார். உடனே அந்த கடைக்காரர் போலீசுக்கு போன் போட்டு, கள்ளநோட்டு மாதிரி தெரியுது வாங்க என சொல்லியுள்ளார். போலீஸ் வந்து அங்கு இருந்த ஜார்ஜ் பிளாயிட்டை கைது செய்தார்கள். இவரிடம் எந்த ஆயுதமும் இல்லை, இருந்தாலும் அவரை அப்படியே கீழ தள்ளி இவரின் கழுத்து மீது போலீசார் கால் வைத்து, 8 1/2 நிமிடம் அப்படியே நெரிந்துள்ளார்.
ஜார்ஜ் பிளாயிட் அந்த இடத்திலே துடிதுடித்துள்ளார். என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னை விட்டுடுங்க என்று கத்தியுள்ளார், ஆனாலும் போலீஸ் கேட்கவில்லை. அவர் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததும் போலீசார் விட்ட போது அவர் மரணமடைந்து விட்டார். இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் கொதிக்கின்றார்கள்.
அமெரிக்காவை பொருத்தவரை, கறுப்பினத்தவரை வெள்ளைத் தோலுடைய மக்களை ஒரு அடிமைகளைப் போல் நடத்துகின்றார்கள். சம உரிமை, சம தர்மம் எல்லாம் கிடையாது. பல ஆண்டுகளாக நடக்கிறது, மீண்டும் நடந்துள்ளது என்று மக்கள் கொந்தளித்து விட்டார்கள். அமெரிக்கா முழுவதும் போராட்ட களமாக மாறியுள்ளது.
அமெரிக்க வட்டாரம் என்ன சொல்றாங்க:
தற்போது நடந்த சம்பவம் மட்டுமல்ல, இது பல வருடமா நடக்குது. மக்கள் மனசுல இந்த கொந்தளிப்பு பல வருடமாக புகைந்து கொண்டிருந்தது என்று அங்குள்ள அதிகாரிகள் சொல்கின்றார்கள்.இது ஒருபுறமிருக்க உலகத்திலேயே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து இருக்கும் நாடு அமெரிக்காதான்.
ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் உயிரிழந்து இருக்காங்க. நாலு கோடி பேருக்கு வேலை போய்யுள்ளது. இப்படி ஒரு கருப்பு இன பேதம் அங்கே வந்திருப்பதால் இது வன்முறை காரணமாக அமைந்துள்ளது என அங்குள்ள நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.