முடி, தாடியை குறைக்க சலூனில் ஆதார் அவசியம் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சலூன்கள் அழகு நிலையம்,ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கார்டை கொண்டு செல்வது அவசியம். வாடிக்கையாளர்களின் முகவரி, பெயர், செல்போன் ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சலூன், அழகு நிலையம் உரிமையாளர், ஸ்பா நிலைய உரிமையாளர், பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் நேரம் ஒதுக்கி அழகு நிலையங்கள் கூடுதல் இதர சேவைகள் செய்ய வேண்டும். மேலங்கி, துண்டை ஒரு முறை பயன்படுத்திய பின்னர் சலவை செய்து மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் சலூன் மூலமாக கொரோனா அதிகம் பரவியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.