Categories
மாநில செய்திகள்

குட்கா, பான் மசாலா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு – தமிழக அரசு!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் விதிகளின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே 23ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |