Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் – புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு!

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்,

  • வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்
  • சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
  • கொரோனா இல்லாதவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவித்துள்ளனர்.
  • ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர், அறிகுறி இருந்தால் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.
  • வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்
  • அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்த முத்திரை குத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |