தமிழ்நாடு வேளான் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது.
விவசாய விளைபொருட்களை மத்திய மாநில அளவிலாக விற்பனை செய்ய ஒருங்கிணைந்த உரிமையை வழங்கல் மற்றும் ஒரு முறை விற்பனை கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண் விற்பனை சார்ந்த முன்னோடி சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளின் நன்மை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குபடுத்தல் சட்டம் 1987 கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து தற்போது இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது.
இந்த அவசர சட்டத்தைப் பொறுத்தவரை வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அதேபோல அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர் பதன மையங்களிலும் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல 1987 சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய விற்பனை குழுக்களில் தனி அலுவலர் பதவி காலத்தை நீட்டிக்கவும் அவசர சட்டம் வழிவகை செய்துள்ளது.தமிழக முதலமைச்சர் பரிந்துரையின்பேரில் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்தார்.