அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை பார்த்ததும் நோயாளி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பபட்டு, அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு சிகிச்சைக்கான கட்டண தொகையை செலுத்துமாறு பில்லை அனுப்பினர். சிகிச்சைக் கட்டணம் என 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் கட்ட சொல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அதற்கான கட்டணமும் சேர்த்து மொத்தம் இந்திய மதிப்பில் ரூபாய் 11.33 கோடி அதாவது 1.5 மில்லியன் டாலர்கள் கட்டவேண்டிய நிலைக்கு கொரோனா நோயாளி தள்ளப்பட்டுள்ளார். மருத்துவ காப்பீடு செய்து இருந்ததால் கொரோனா நோயாளி தப்பியுள்ளார். இந்நிலையில் மருத்துவ கட்டண விவகாரம் அமெரிக்காவில் வைரலாகி வருகின்றது.