Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மேலும் 887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

சென்னையில் இன்று மேலும் 887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 15,770 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,935 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடம்பாக்கம், திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் தண்டையார் பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று மேலும் 887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை தலைமைச்செயலகத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் சென்னையில் மட்டும் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |