Categories
உலக செய்திகள்

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது….! ராணுவத்தை களம் இறக்குவேன் – ட்ரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிடாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் உள்ள மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த வாரம் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு வந்து போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இது பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.இதனால் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொழுத்த பட்டது. பல கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன.

சிகாகோ, நியூயார்க், லாஸ்ட் ஏஞ்சல் போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை விரட்ட அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தபட்டது. இதனால் போராட்டகாரர்கள் விரட்டி அடைக்கப்பட்டனர். 40 நகரங்களில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டன் போன்ற 15 மாகாணங்களில் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினர், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் தடுப்பு போலீஸார்கள் மீது  கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 1960 காலகட்டத்திற்கு பிறகு இது போன்ற ஒரு நிலையை அமெரிக்காவில் பார்த்ததில்லை என சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மேலும் வன்முறையை மேற்கொண்டால் ராணுவத்தை உபயோகப்படுத்தி வன்முறையை கட்டுப்படுத்துவேன் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின மனிதருக்கு நீதி வழங்கப்படும். ஜனாதிபதியான எனது முதல் கடமை நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதாகும். ஒரு நகரம் அல்லது மாநில நிர்வாகம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மறுத்தால் நான் அமெரிக்க ராணுவத்தை கொண்டு வந்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Categories

Tech |