தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 3 இலக்கத்திலும், உயிரிழப்பு இரட்டை இலகத்திலும் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 24,586ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,595ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 13706 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் 10680 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 150 பேர் அடங்கும். தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (1149) , நேற்று (1162) என தொடர்ந்து கொரோனா தொற்று மூன்றாவது நாளாக ஆயிரத்தை கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.