இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தொடங்கி தற்போது வரை 2,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2 லட்சத்து ஆயிரத்து 7ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,628ஆக உயர்ந்துள்ள நிலையில் 96,534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 98,834 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30,108 பேர் குணமடைந்து இருக்கின்றார்கள். 2,362 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 24,586ஆகவும் , டெல்லியில் 20,834 பேரும், குஜராத்தில் 17,217 பேரும், ராஜஸ்தானில் இன்று 171 பேர் பாதிக்கப்பட்டதால் 9,271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.