Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் வீரியம் குறைகிறது” – ஒரு மகிழ்ச்சியான செய்தி…!

நாம் சந்திக்கின்ற பெரும்பலான நபர்கள் கொரோனாவை குறித்து ஒரு பயத்தை தூவி விடுகின்றனர்.

இந்த நிலையில் இத்தாலி நாட்டில் புகழ் பெற்ற ஒரு மருத்துவர் ( அவர் பெயரை சொன்னாலே இத்தாலி முழுவதும் தெரியும்) அந்த மருத்துவர் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை உலகிற்கு சொல்லியுள்ளார். கொரோனா வைரஸ் ஆற்றல் குறைகிறது. பழைய வீரியம் இல்லை அப்படின்னு பிரபல இத்தாலி மருத்துவ தகவல் சொல்லியிருக்கிறார். இதனால் உயிர் இழப்பு ஆபத்தும் முன்பை விட குறைவு என்று இத்தாலி மருத்துவர் ஆல்பர்ட்டோ சொல்லியுள்ளார்கள்.

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு தனிப்பட்ட மருத்துவர் தான் இந்த ஆல்பர்ட்டோ. அந்த பிரதமர் ரொம்ப ஃபேமஸ் என்பதால் இந்த மருத்துவரும் ரொம்ப பேமஸ் ஆயிட்டார். இத்தாலி நாட்டில் இவர் பெயரை சொன்னாலே தெரியும். கடந்த பத்து நாட்களில் எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளின் ஆய்வின் அடிப்படையில் இந்த தகவலை நான் சொல்கிறேன் அப்படின்னு சொல்லி இருக்கிறார். கடந்த 2 மாதங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளோடு ஒப்பிடுகையில் சமீபத்திய கொரோனா மாதிரிகளில் வைரஸ் வலுவிழந்து காணப்படுகிறது.

இதன் தாக்குதலில் பழைய வீரியம் இருக்காது அப்படின்னு இத்தாலி மருத்துவ நிபுணர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்கா அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டார்கள். அடுத்தபடியாக இங்கிலாந்து, அடுத்தபடியாக இத்தாலி. இத்தாலியை பொறுத்தவரை சுமார் 33 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தாலி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் புதிய நோய்தொற்று, உயிரிழப்பு அதிரடியாக குறைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா வைரஸின் ஆற்றல் குறைவு குறித்த மகிழ்ச்சி தகவலை பிரபல இத்தாலி மருத்துவர் வெளியிட்டார். அஜாக்கிரதை வேண்டாம், போதுமான அறிவியல் ஆதாரம் வரும் வரை காத்திருப்போம் அப்படின்னு சொல்லி உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக சுகாதார மையம் இப்படி சொல்கிறார்கள் என்று மீண்டும் செய்தியாளர்கள் அந்த புகழ்பெற்ற மருத்துவரிடம் கேட்டபோது,  வைரஸ் மாறிவிட்டது என்று நாங்கள் சொல்லவில்லை , மனித உடலில் வைரஸின் வீரியம் குறைந்து விட்டது என்கிறோம் என்று சொல்லி அடுத்தவாரம் இது தொடர்பான ஆய்வை நாங்கள் வெளியிடுவோம் அப்படினு அந்த மருத்துவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |