Categories
மாநில செய்திகள்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் அளித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி – தேவாலாவில் 9 செ. மீ., மழையும், கன்னியாகுமரி சித்தாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே நிசர்கா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல் அளித்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே கரையைக் கடக்கும் நிசர்கா புயல் நகர்வை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |