Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல 11, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத தவறியவர்களுக்கும் இதனுடன் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் பெறலாம், தனித்தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 8ம் தேதிக்குள் பணிசெய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து வாங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனோ தாக்கம் காரணமாக தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 100க்கு மேற்பட்ட மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |