Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திக்திக் தலைநகர்….! ”இல்லாத உச்சம் தொட்ட கொரோனா” கலங்கிய சென்னை …!!

தமிழகத்தில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் உயிரிழப்பும், இரட்டை இலக்கத்தில் பதிவாகியது மக்களை  செய்வதறியாது திகைக்க வைத்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது நாளாக இன்றும்  கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியள்ளதை போல உயிரிழப்பும் இரட்டை இலக்கை தொட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதே போல இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  இல்லாத அளவாக சென்னையில் 1012 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் 610 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25,872ஆக அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் மொத்த பாதிப்பாக 17,598ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பாக 208 ஆக உயர்ந்துள்ளது , சென்னையில் மட்டும் 158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |