Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 17,598ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 1244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 787 பேர் ஆண்கள், 498 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 16,181 ஆண்களும், 9,677 பெண்களும், 14 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 44 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 73 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,28,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |