Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…தடைகள் நீங்கும்…நிதானம் தேவை …!

விருச்சிக ராசி அன்பர்களே…!     இன்று எவரிடமும் நிதானித்து தான் நீங்கள் பேசவேண்டும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க  வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் செல்லும். கடினமான உழைப்பும் இருக்கும். கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க வேண்டும்.

நினைத்திருந்த பொருளொன்றை இன்று வாங்குவீர்கள். மனை வாங்கும் முயற்சிகளில் சற்று தாமதமாக தான் நடக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் விசாரித்து செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். தனிப்பட்ட பணவரவு தடை நீங்கி கையில் வந்து சேரும். குழந்தைகள் பற்றிய கவலையும் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். ஓரளவு முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்து விஷயங்களும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |