Categories
அரசியல்

அமமுக_வுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா…? காலை 10 மணிக்கு வழக்கு விசாரணை…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது.

கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இலை சின்னம் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு என்று உத்தரவிட்டது . பின்னர்  இந்த தீர்ப்பை எதிர்த்து TTV தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

Image result for குக்கர் சின்னம்

இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . இதையடுத்து சின்னம் தொடார்பான தீர்ப்பு வர தாமதமான சூழலில் தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென்று TTV தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை  நேற்று  நடைபெற்ற போது பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான உரிய சட்ட விதிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரிக்கப்பட இருக்கின்றது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்புக்காக அமமுக வேட்பாளர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |