தனுசு ராசி அன்பர்களே …! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறந்து மனதில் உற்சாகம் பிறக்கும். சராசரி பணவரவு பணம் வசூலாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதாவது சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற திட்டங்களைத் தீட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை விலகிச்செல்லும். பேசாமல் இருப்பது நன்மைய கொடுக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போது கவனம் வேண்டும். மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல தெளிவான சிந்தனை உருவாகும். எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். செலவுகள் அவ்வப்போது வந்து செல்லலாம். அரசியல் தொழில் சார்ந்தவர்களுக்கு பொறுப்புகள் வந்து சேரும்.
வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். காதலர்கள் இன்று சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.