கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை கொடுக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தத்த்து. கட்டணத்தை அரசு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டனர். இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இன்று தமிழக அரசு சார்பில் அரசாணையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய மெடிக்கல் அசோசேஷன் (IMA) தமிழக பிரிவு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்-சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று ஒரு பரிந்துரையை அரசுக்கு கொடுத்துள்ளது. அதில் லேசான பாதிப்பு, அறிகுறி உள்ள நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ 23,182 என 10 நாட்களுக்கு 2,31,820 ரூபாய் வசூலிக்கலாம் என்றும், தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 23,377 ரூபாய் என ரூ. 4,31,411 வசூலிக்கலாம் எனவும் இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.