Categories
உலக செய்திகள்

பகைக்கும் ட்விட்டர்…. பாராட்டும் ஃபேஸ்புக்…. நொந்து போன ட்ரம்ப் …!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கள் மீது சமூக வலைத்தளங்களான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைபிடிக்கின்றன. இது கருத்துரிமைக்கு உண்மைச் செய்திக்கும் இடையிலான விவாதத்தை உருவாக்கி இருக்கின்றது.

தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார், அதை தவறான தகவல் என்று டுவிட்டர் எச்சரிக்கை செய்தது.ஜார்ஜ் பிளாயிட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவோரை ரவுடிகள் என்று ட்ரம்ப்  விமர்சித்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி அந்த பதிவை ட்விட்டர் நீக்கியது. கடைகள் சூறையாடப்பட்டாள் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என ட்ரம்ப்  மிரட்டினார். அதை தங்களது கொள்கைக்கு எதிரானது என்று ட்விட்டர் அழித்தது.

அதேநேரத்தில் மற்றொரு மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கிலும் ட்ரம்ப் இவற்றையெல்லாம் பதிவிட்டார். அவற்றை ஃபேஸ்புக் நீக்கவும் இல்லை, பயனாளர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் அளிக்கவும் இல்லை.  ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் அரசுக்குச் சொந்தமானவை அல்ல, இரண்டும் தன்னிச்சையாக வர்த்தக நோக்கத்துடன் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவற்றுக்கு தனித்தனியாக நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால் ஒரே பதிவை ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் வெவ்வேறு மாதிரியாக அணுகியது பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

பேஸ்புக்கு ட்ரம்ப்புக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், சமூக வலை தளங்கள் மீதான அவரது மிரட்டலுக்கு பணிந்து விட்டதாகவும் பலர் விமர்சிக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல, பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் நிலையிலானா கூட்டத்திலும் பலர் மார்க் எலியட் ஜுக்கர்பெர்க்கிடம் தங்களது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார்கள். ட்விட்டரை போல ட்ரம்பின் பதிவு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் தங்களது கொள்கை வேறு மாதிரியானது என்கிறார் என்று தெரிவிக்கின்றார் பேஸ்புக் நிறுவனர் மார்க் எலியட் ஜுக்கர்பெர்க்.

 

மக்களின் கருத்துரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் சற்று கடுமையாக பொதுவெளியில் விமர்சனம் செய்யும் போது கணக்குகளை முடக்கும் அளவுக்கு பேஸ்புக் நடவடிக்கை எடுப்பதை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். எப்படி இருப்பினும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் சமூகவலைதள உலகின் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகியிருக்கிறது.

Categories

Tech |