10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் என்பது இன்று வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இணையதளம் மூலமாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மாணவர்கள் அவர்கள் பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகி இருக்கிறது. http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்களுடைய ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.