பொதுமுடக்க காலத்தில் 100 % ஊதியம் வழங்குவது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பொது முடக்க காலத்தில் நாடு முழுவதிலும் தொழில் நிறுவனங்கள் ஆங்காங்கே முடக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் 100 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
நிறுவனம் சார்பில் வாதம்:
அப்போது, வேலை பார்க்காமல் 100 சதவீத ஊதியம் எப்படி வழங்க முடியும் என்று தொழில் நிறுவனங்கள் சார்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன. ஒரு ஊழியருக்கு 100 சதவீத ஊதியத்தை பணி செய்யாமல் கொடுத்துவிட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது அந்த நிறுவனங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி விடக் கூடியது எனவே மத்திய அரசு இதனை என் கருத்தில் கொள்ளாமல் எப்படி இந்த உத்தரவை போடலாம் என வாதங்கள் பறந்தன.
பின் வாங்கிய மத்திய அரசு:
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதில், மார்ச் 25ஆம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை மொத்தம் 54 நாட்களுக்கு மட்டும் தான் நாங்கள் இந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோமே தவிர அதற்கு பிறகு 54 நாட்களுக்கு பின்பும் வழங்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. 54 நாட்களுக்கு பின்பு அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டது, அதற்கு மேல் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை ஊதியத்தை வழங்க வேண்டாம் என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
நீதிமன்றம் கேள்வி:
இதற்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில முக்கியமான கேள்விகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு இந்த தொகையினை வழங்க ஏன் உத்தரவு பிறப்பித்தீர்கள். 50 சதவீத ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை, 100% ஊதியத்தை எப்படி வழங்க முடியும், நிறுவனங்கள் இக்கட்டான சூழ்நிலை இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில் ஊழியர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிலிருந்து என்ன உதவிகள் செய்யப்பட்டன என கேள்விகளை முன் வைக்கப்பட்டிருக்கிறது. வாதங்கள் நிறைவு பெற்றுள்ளதால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏமாந்த ஊழியர்கள்:
குறிப்பாக ஊழியர்கள் வேலை செய்யாமல் பெற்ற சம்பளத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருப்பதை அரசு பரிசீலிக்குமா ? இல்லையா என்று நீதிமன்ற உத்தரவை பொறுத்து தான் தெரியும். மே மாதம் முழுவதும் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு தற்போது வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது, தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் முழுமையாக பணிகள் தொடங்கவில்லை. முழுமையாக பணியாளர்களால் பணிக்கு செல்ல முடியாத நிலை தொடர்வதால் மத்திய அரசு 54 நாட்களுக்கு மட்டும் தான் சம்பளம் வழங்க சொன்னோம் என்பது ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.