Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாசத்துக்கு கொடுங்க…! ”உத்தரவு போட்ட கோர்ட்” புதுவை மக்கள் மகிழ்ச்சி …!!

புதுச்சேரியில் மூன்று மாதத்துக்கு அரிசி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து  முதல்வராக இருக்கின்ற நாராயணசாமி வழக்கு தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு, நாராயணசாமி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா காரணமாக இலவச அரிசி கொடுக்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, புதுச்சேரியில் மட்டும் வழங்கப்படவில்லை.

Puducherry CM V Narayanaswami on dharna for second consecutive day ...

இதற்கிடையில் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் அரிசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வாதிடப்பட்டது. இதனை உள்வாங்கிய நீதிபதிகள் புதுச்சேரி மாநிலத்தில் 3 மாதத்திற்கு இலவச அரிசி வழங்க உத்தரவிட்டு, இந்த வழக்கு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், மத்திய அரசு ஜூலை 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Categories

Tech |