Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றம் தேர்தல் 604….. சட்டமன்றம் இடைத்தேர்தல் 230…… இன்றோடு நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது .

Image result for தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் 19_ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் பாராளுமன்றத்துக்கு போட்டியிட கூடியவர்கள் வேட்பாளர்கள் 25,000 ரூபாய் வேட்புமனு கட்டணமாக  செலுத்த வேண்டுமென்றும் , SC/ST வேட்பாளர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 12,500 ரூபாய் செலுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வேட்புமனு தாக்கல் வருகின்ற 26_ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Image result for வேட்புமனு தாக்கல்

இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு வேடங்களில் வந்து சுயேச்சை வேட்பாளர்களும் ,   பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வழங்கினார். இந்நிலையில் நேற்று (25/03/19) வரை  நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மக்களவை தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது .

Categories

Tech |