Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சொல்லி பார்த்தோம், யாரும் கேட்கல… அதான் இப்படி முடிவு எடுத்தோம்… அதிரடி காட்டிய தமிழக அரசு …!!

இனிமேல் வீடுகளில் தனிமைபடுத்துவது கிடையாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000யை தாண்டிய நிலையில் உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகியது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 25,872ஆக உயர்ந்து உயிரிழப்பு 200யை தாண்டியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 17,587ஆக இருக்கும் நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்த போது,கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்த்தவர், கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் வீடுகளில்  என தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் மட்டுமே அரசின் உத்தரவை பின்பற்றுகிறார்கள், 20 சதவீதமானோர் அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றுகிறார்கள். அவர்கள்  நோய் பரவல் அதிகமாக உள்ளது.

இதனால் இனிமேல் வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 3000 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். எனவே இனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அரசின் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் அரசின் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நோய் பரப்பியதாக சட்டப்படி காவல்துறை மீதும் வழக்கு பதிவு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Categories

Tech |