முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட நேற்று வரை 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். பொதுமக்களிடம் நாம் இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தினமும் எண்ணிக்கை கூடும் போது அச்சம் ஏற்படுகின்றது. சென்னையில் மட்டும் 9034 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 8405 பேர் தான் மருத்துவமனையில் இருக்கின்றார்கள்.
சாதிக்க முடிந்தது:
முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் நமக்கு இருக்கும் சவால்கள் என்னெவென்றால், இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் நோய் என்பதால் நமக்கு இருந்த சவாலில் சக்ஸ் என்னவென்றால் மூர் மார்க்கெட், வி ஆர் பிள்ளை தெரு இங்கெல்லாம் 88 பேருக்கு இருந்த கொரோனா பாதிப்பு பூஜ்யம் ஆகியது. இது எப்படி எங்களால் சாதிக்க முடிந்தது என்று பொதுமக்கள் புரிந்தால்தான் அவுங்க ஒத்துழைப்பு கிடைக்கும்.
பீதி வேண்டாம்:
இந்த பகுதிகளில் எல்லாரும் 100% மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க கடைபிடித்தார்கள். நோய் கட்டுப்பாட்டு பகுதி என்று அறிவிக்கப்பட்ட போது அதை முழுமையாக கடைப்பிடித்தார்கள். தட்டாங்குளம் என பல்வேறு பகுதியில் கொரோனா பாதிப்பு பூஜ்யம் ஆகி நமக்கு வெற்றி கிடைத்தது. சவாலான பகுதிகளிலிருந்து பாத்தீங்கன்னா நமக்கு தொடர்ந்து தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய சவால்களை பொது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒட்டுமொத்த சென்னையிலும் கொரோனா இருக்குன்னு என்ற பீதி வேண்டாம்.
எல்லாருக்கும் விழிப்புணர்வு இருக்கு:
முதலமைச்சர் ஆணைக்கிணங்க தலைமைச் செயலாளர் தெருத்தெருவாக ஒரு வார்ட், மண்டலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அமைச்சர்கள் மேற்பார்வையில் பார்த்து கொண்டு இருக்கும் போது, ஒவ்வொரு வார்டு வாரியாக பிரித்து, எந்த வார்டில் எவ்வளவு பாதிப்பு இருக்கிறது? கடந்த மூன்று நாளில் எவ்வளவு பாதிப்பு இருக்குனு பாக்குறோம் ? அந்த வகையில் பாக்கும் போது, போஜராஜ நகர் முழுமையாக கடந்த 16 நாளில் முழுமையாக கேஸ் இல்லாம குறைத்துவிட்டோம், ஏனென்றால் பொதுமக்கள் ஒத்துழைக்கிறார்கள். இது கண்ணுக்கு தெரியாத வைரஸ். எலிக்காய்ச்சல் வரும் போது எலியை பாக்குறோம், நாயின் யூரின் மூலம் பரவும் என்று நமக்கு தெரிகிறது. டெங்கு காய்ச்சல் என்றால் நல்ல தண்ணில வரக்கூடிய கொசு என்று அனைவரும் உணர்கின்றோம், எல்லாருக்கும் விழிப்புணர்வு இருக்கு.
1 மாசம் மாஸ்க் போடுங்க:
வட சென்னை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்க கூடிய சவால்கள் என்னெவென்றால், மக்கள் விழிப்புணர்வு பெறுவது சவாலாக இருக்கு. கொரோனாவுக்கு உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து நேரடி மருந்து இல்லை. அதே மாதிரி தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படினா கொரோனாவில் இருந்து தப்பிக்க என்ன வழி ? என்று மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார மையம் சொல்லுறாங்கன்னா ”எல்லோரும் கட்டாயம் மாஸ்க்” அணிய வேண்டும். முதலமைச்சர் தெளிவாக ஆய்வு கூட்டத்தில் சொல்லி இருக்காங்க. தயவுசெய்து எல்லோரும் கட்டாயமாக அடுத்த ஒரு மாசம் முழுமையாக முக கவசம் அணிந்தால் நோய் பரவலை அப்படியே கட்டுப்படுத்த முடியும், அதே போல கைகழுவ வேண்டும்.