05-06-2020, வைகாசி 23, வெள்ளிக்கிழமை.
இராகு காலம் – பகல் 10.30-12.00
எம கண்டம்- மதியம் 03.00-04.30
குளிகன் காலை 07.30 -09.00.
நாளைய ராசிப்பலன் – 05.06.2020
மேஷம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சற்று மனக்குழப்பமாகவே காணப்படுவீர்கள். பேசும்போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுதும் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
ரிஷபம்
பண வரவு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஒருசில மாறுதல்களை செய்வதால் லாபத்தைப் பெறுவீர்கள்.
மிதுனம்
உங்களுக்கு இன்று திடீர் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மன நிம்மதியை கொடுக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். சொத்து சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்மம்
உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் நிலையில் சற்று சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவில் இருந்த தடைகள் அகலும். வியாபாரத்தில் எதிரிகளாக இருப்பவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
நீங்கள் எந்த செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக நற்செய்திகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பழைய கடன்கள் தீரும். தொழில் தொடர்பாக வெளிவட்டார நட்பு உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
தனுசு
எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மனக்கசப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.
மகரம்
உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நன்மையை கொடுக்கும்.
கும்பம்
உறவினர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தியாகும். சிலருக்கு வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும்.
மீனம்
குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.