சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரனின் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ அதுபோன்று சந்திரன் காட்சி அளிக்கும். பவுர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவதே ஆகும். சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரை குறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
கிரகணம் அன்று என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ள கூடாது. ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை அதாவது அருகம்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகு உணவு உட்கொள்ள வேண்டும்.