கேதுவின் ஆதிக்கத்தை பெற்றிருக்கும் சந்திர கிரகணம் பௌர்ணமி நாளன்று தான் நிகழும். 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜூன் 5ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. வைகாசி மாதம் 23ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நடக்கும். சரியாக 5 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு தொடங்கி 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணி வரை நீடிக்கும். முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10 ஆம் தேதி நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது
சந்திர கிரகணம் கேட்டை நட்சத்திரத்தில் நிகழ இருப்பதால் கேட்டை நட்சத்திரம் உள்ளவர்கள் அதற்கு முன் மற்றும் பின் இருக்கும் நட்சத்திரங்களை கொண்டவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கேட்டை நட்சத்திரம் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்றது என்பதால் புதன் பகவான் ஆட்சி செய்யக்கூடிய ரேவதி மற்றும் ஆயில்யம் நட்சத்திரம் கொண்டவர்களும் பரிகாரம் செய்யவேண்டியது அவசியம் அதனடிப்படையில் விருச்சிகம், தனுசு, மீனம், கடகம் ராசிகாரர்கள் பரிகாரத்தை செய்ய வேண்டும்