கிரகணத்தில் செய்யக்கூடியவை
- சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் முன்பும் முடிந்த பின்பும் கண்டிப்பாக குளிக்க வேண்டும்.
- கிரகணம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவை உட்கொள்ள வேண்டும்.
- சந்திர கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து தீபமேற்றி இறைவனை வழிபட வேண்டும்.
- கிரகணம் நிகழும் நேரத்தில் குருவின் உபதேசம் கேட்பது, தெய்வங்களை வழிபடுவது, வேதங்களை படிப்பது, ஆன்மீக புத்தகங்களை படிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் இறைவனின் அருளை பல மடங்கு கிடைக்கச் செய்யலாம்.
கிரகணத்தில் செய்யக்கூடாதவை
- உணவு சமைப்பதையோ உணவு அருந்துவதையோ முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- சந்திர கிரகணத்தின் போது கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த கூடாது.
- சந்திர கிரகணம் நிகழும் பொழுது முடி வெட்டுதல் நகம் கடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.