ரிஷப ராசி அன்பர்களே …! இன்று ஆரோக்கியத்தில் கண்டிப்பாக நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப் பணிகளில் நாட்டம் செல்லும். நீண்ட நாளைய ஆசை ஒன்று இன்று நிறைவேறும். குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் அடைவதற்கான சூழல் உண்டு. அரசியல் பிரமுகர்களுக்கு பொதுமக்கள் நல்ல மதிப்பும்,மரியாதையும் அளிப்பார்கள்.
பொறுமையுடன் செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதைப்பற்றியும் தேவையில்லாத குழப்பம் மட்டும் வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது ரொம்ப நல்லது. அதேபோல இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள். உங்களுடைய மனம் லேசாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் புதிதாக கடன்கள் வாங்க வேண்டாம்.
காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.