கடக ராசி அன்பர்களே …! இன்று யோகமான நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரக்கூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உடல் நலம் சீராகும், வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றி அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், சுபகாரியங்கள் நிகழும்.
விவசாயிகளுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். தொழிலாளர்களுக்கும் நல்ல நன்மைகள் வந்து சேரும். சின்ன சின்ன தடங்கல் வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக காரியங்களில் ஈடுபடுங்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் வந்தாலும் கொஞ்சம் பொறுமை காத்து பின்னர் காரியத்தில் இறங்குவது ரொம்ப நல்லது. மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
மனதை அமைதியாக வைத்துக் கொண்டாலே போதுமானது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.