தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இக்கட்டான சூழலில் நடத்த வேண்டாம் என்றும், இதனை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி முடிக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகின்றது.
அந்ததந்த பள்ளியே தேர்வு மையமாக செயல்படும் என்றும், ஒரு வகுப்புக்கு 10 மாணவர்கள் தான் தேர்வு எழுத வேண்டும் என்றும் சமூக விலகலை கடைப்பிடித்து தேர்வு நடத்துவதற்கான முழு முயற்சியையும் பள்ளி கல்வித்துறை உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டது.
இன்று மதியம் முதல் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து இருந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக ஹால்டிக்கெட்டோடு சேர்த்து மாணவர்களுக்கு இரண்டு முகங்கள் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. வருகின்ற 8 மற்றும் 9ஆம் தேதி மாஸ்க் வழங்கப்படும் என்றும் இதற்காக 46 லட்சத்து 50 ஆயிரம் முகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக பள்ளிகல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்