கும்ப ராசி அன்பர்களே …! தனவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்று உறவினர்கள் வழியில் கேட்கலாம். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவு எடுங்கள்.
அதே போல உங்களின் செயல்பாட்டில் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது மட்டும் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். மாலை நேரங்களில் மட்டும் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
மனம் மிகவும் உற்சாகமாகவே காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.