Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…வருமானம் இருமடங்காகும்…நிம்மதி உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!       இன்று கோவில் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் அவருடைய அன்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகி நிம்மதி கிடைக்கும். இன்று எல்லா நானும் உங்களுக்கு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக அயராது உழைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை ஈட்டும் வருமானம் இருமடங்காகும்.

இன்று மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களையும் நீங்கள் சிறப்பாக செய்யமுடியும். அதற்கு மனமும் நமக்கு அமைதியாக இருக்க வேண்டும். மனதை அமைதிப்படுத்துவது இசை பாடலை கேளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். தயவுசெய்து அலட்சியம் காட்டவேண்டாம். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும்.

காதலில் புதியதாக வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |