சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றதை போல, உயிரிழப்பும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி மக்களை நடுங்கச் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த மேலும் 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினந்தோறும் மாலையில் தான் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியாகும். எனவே இன்றும் மாலை வெளியாகும் தகவலில் தொடர்ந்து 6ஆவது நாளாக உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 27,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 167 பேர் மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.