Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,26,770ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,355 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,348 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,10,960பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 33,681 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,710 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 25,004 ஆக உள்ளது. குஜராத் மாநிலத்தில் 18,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 9,862, பீகார் – 4,493, ஆந்திரா – 4,223, கர்நாடகாவில் 4,320 பேரும், தெலுங்கானா – 3,147, ஹரியானா – 3,281, கேரளா – 1,588 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |