திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் தான் தற்போது வெளியான தகவலில் அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உறுதி படுத்தியுள்ள மருத்துவமனை நிர்வாகம் தற்போதைய சூழலில் அவருக்கு 13 சதவீதம் ஆக்சிஜன் தேவை இல்லை என்றும், 67 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது நேற்று நிலையைக் காட்டிலும் அவருக்கு நல்ல நிலையில் இருப்பதாகவும், இதயத்துடிப்புகள் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய்வித்துள்ளது.
இருந்தும் தொடர்ச்சியாக அன்பழகன் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதால் கொரோனா இந்த மாதிரி மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அன்பழகனும் தொடர்ச்சியாக மருத்துவம் அளிக்க வேண்டும் மருத்துவமனை நிர்வாகம் சொல்லியுள்ளது. இதனால் திமுகவினர் சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.
ஜெ.அன்பழகன் திமுகவில் சென்னையின் முக்கியமான தலைவராகவும் , கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலாளராக இருக்கிறார். மூன்றாவது முறையாக எம்எல்.ஏ வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.