Categories
மாநில செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்புகள் கண்டெடுப்பு ; தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு – அமைச்சர் பாண்டியராஜன்!

கீழடியில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கீழடி அகழாய்வில் விலங்கின் எலும்பு ...

அதன் பின்னர் மே 20ம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கீழடி அகழாய்வில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த விலங்கு குறித்து அறிந்து கொள்ள தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், கீழடி அகழாய்வில் கிடைத்த விலங்கின் எலும்புகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்விற்கு பிறகு இது எந்த வகை விலங்கு என்பதும், எத்தனை வருடங்களுக்கு முந்தைய விலங்கு என்பதும் தெரிய வரும் என கூறியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வு பணியின் போது, திமில் உள்ள காளையின் எலும்புகள் கண்டறியப்பட்டது. இது சங்க கால பாடல்கள் இருந்த காட்சிகள் கற்பனை அல்ல என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் கீழடி ஆய்வுகள், தமிழர் வரலாற்றை மீள் உருவம் செய்ய முக்கிய பங்கு வகிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |